யாழில் மாணவனைத் தாக்கிய ஆசிரியர் - நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
யாழ்ப்பாணத்தில் (Jaffna) மாணவனைத் தாக்கிய குற்றச்சாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட ஆசிரியரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக வட்டுக்கோட்டை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு
வட்டுக்கோட்டை சித்தங்கேணிப் பகுதியில் தனியார் கல்வி நிறுவனமொன்றில் வகுப்புக்கு வருகைதரும் மாணவன் ஒருவர் 'பட்டப் பெயர்' கூறி அழைத்ததாகத் தெரிவித்து மாணவரை ஆசிரியர் வகுப்புவேளையில் அடித்துத் தாக்கியுள்ளார்.
இந்நிலையில் மாணவனின் பெற்றோர் வட்டுக்கோட்டைப் காவல் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய ஆசிரியர் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
இதன்போது கைது செய்யப்பட்ட தனியார் கல்வி நிலைய ஆசிரியரை எதிர்வரும் 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
You may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
