அரச பாடசாலை ஆசிரியரின் தில்லாலங்கடி அம்பலம் : எடுக்கப்பட்ட நடவடிக்கை
அநுராதபுரம்(anuradhapura) பாடசாலையொன்றின் உயர்தர மாணவர்களுக்கு கணிதம் கற்பித்த ஆசிரியர் ஒருவர், பாடசாலை நேரத்தில் தனியார் கல்வி நிலையத்தில் கல்வி கற்பித்ததற்காக அவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டதாக வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.டபிள்யூ. சமரக்கோன் தெரிவித்தார்.
இந்த ஆசிரியர் பணத்திற்காக பாடசாலை நேரங்களில் மாணவர்களுக்கு குழு வகுப்புகளில் கற்பிப்பதாக பெற்றோர்கள் குழுவொன்று மாகாண கல்விப் பணிப்பாளரிடம் முறைப்பாடு செய்திருந்தது.
பாடசாலை சோதனை
குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் மாகாண கல்விப் பணிப்பாளர் ஏனைய ஊழியர்களுடன் இணைந்து பாடசாலையை சோதனையிட்ட போது குறித்த ஆசிரியர் பாடசாலையின் ஆசிரியர்களின் வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டு விட்டு வெளியேறியமை தெரியவந்ததாக மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.
பாடசாலையை விட்டு வெளியேறிய அவர் சாலியபுர பகுதியில் உள்ள மாணவர்களுக்கு கற்பித்தமை தெரியவந்தது.
எவரது அனுமதியுமின்றி விடுமுறை
இவ்வருடம் இதுவரையில் 26 நாட்கள் ஒருவரின் அனுமதியும் பெறாமல் இந்த ஆசிரியர் விடுமுறை எடுத்துள்ளதாகவும் மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.
இதன்படி, மாகாணக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.டபிள்யூ. சமரகோன் நேற்று (17) முதல் குறித்த ஆசிரியரை பணி இடைநிறுத்தம் செய்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |