பயிற்சி ஆசிரியர்களுக்கு வெளியான விசேட அறிவிப்பு
Sri Lankan Peoples
Department of Examinations Sri Lanka
Teachers
By Dilakshan
ஆசிரியர் கல்லூரிகளின் இறுதித் தேர்வு தொடர்பில் பரீட்சைத் திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பட்டதாரி அல்லாத பயிற்சி ஆசிரியர்களுக்கான பரீட்சை மே 2025 இல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நேற்று (09) முதல் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை இணையவழியில் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வலைத்தள விண்ணப்பம்
இதேவேளை, நிகழ்நிலையில் (Online) மாத்திரமே விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic க்குச் சென்று வழங்கப்பட்ட பயனர்பெயர்கள் மற்றும் கடவுச்சொற்களைப் பயன்படுத்தி விண்ணப்பங்களை சமர்பிக்க முடியும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி