நாளை முதல் விலகுவோம் - ஆசிரியர் தொழிற்சங்கங்கள் உறுதி
education sri lankapeople
By Shalini
இணையத்தின் மூலமான கற்பித்தலில் இருந்து நாளை முதல் விலகுவதாக மேற்கொண்ட தீர்மானத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
அமைதியான முறையில் போராட்டம் நடத்திய தங்களது பிரதிநிதிகள் மனிதாபிமானற்ற முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தத் தொழிற்சங்க போராட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம், அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம், அதிபர் சேவையாளர் சங்கம் உள்ளிட்ட 14 சங்கங்கள் ஆதரவு வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி