மகிந்தவின் வீட்டின் முன் பதற்றம் - ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை பிரயோகம்(காணொளி)
police
prime minister house
tangalle
srilankan crisis
tear gas
water cannons
By Kanna
ஹம்பாந்தோட்டை, தங்காலையில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வீட்டிற்கு முன்னால் கடும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வீட்டிற்கு அருகில் இன்று மக்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இன்று காலை முதல் இடம்பெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, காவல்துறையினரின் பாதுகாப்பு கடவைகளை உடைத்து மக்கள் உள்ளே நுழைய முற்பட்டனர்.
இந்தநிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க காவல்துறையினர் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்துள்ளனர்.
இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி