போலி வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இளைஞர் ஒருவர் கைது!
போலி வெளிநாட்டு நாணயத்தாள்களை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹட்டன் பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளால் நேற்றையதினம் (12.9.2026) அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹட்டன் வட்டவளை பகுதியைச் சேர்ந்த 19 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அந்த சந்தேக நபர் போலி நாணயத்தாள்களை மாற்றுவதற்காக ஹட்டன் நகருக்கு வருவதாகக் கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
கொழும்பை சேர்ந்த தனது மைத்துனர் இந்த வெளிநாட்டுப் பணத்தாள்களைத் தன்னிடம் கொடுத்ததாகவும், அவை போலி நாணயத்தாள் என்பது தனக்குத் தெரியாது என்றும் அந்த சந்தேக நபர் காவல்துறக்கியினரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த சோதனையின் போது, சந்தேக நபரிடமிருந்து 9 போலி 200 யூரோ பணத்தாள்கள் மற்றும் 7 போலி 100 யூரோ பணத்தாள்கள் உட்பட 16 போலி வெளிநாட்டுப் பணத்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
போலி பணத்தாள்கள் குறித்த மேலதிக விசாரணைக்காக இந்த வழக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் என்று ஹட்டன் காவல்துறை சிரேஷ்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
போர்க்குற்றவாளி இல்லையெனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும்... 11 மணி நேரம் முன்