விடுதி ஒன்றில் இளம் ஜோடி தூக்கிட்டு தற்கொலை - வெளியான பின்னனி
சுற்றுலா உணவாக விடுதி ஒன்றின் வரவேற்பு அறைக்கு அருகில் இளம் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தங்காலை பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
உயிரிழந்த இருவரின் சடலங்களையும் நேற்று காலை விடுதி ஊழியர்கள் அவதானித்ததை அடுத்து காவல்துறையினருக்கு தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டவர்கள்
குறித்த சம்பவம் தொடர்பாக ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் மகேஷ் சேனாரத்ன தெரிவிக்கையில்,
''குறித்த சந்தர்ப்பத்தில் விடுதியில் பல வெளிநாட்டவர்களும் தங்கியிருந்ததாக தகவல் கிடைத்துள்ளது.
சிறுவயதில் இருந்து இந்த விடுதியில் வளர்ந்த 22 வயது இளைஞனும், அவனது காதலி என்று கூறப்படும் 17 வயது யுவதியமே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.
தந்தை குறித்த தகவல்
உயிரிழந்த ஊழியர் நேற்று முன்தினம் இரவு முச்சக்கர வண்டியில் அம்பலாந்தோட்டைக்கு சென்று தனது காதலியை அழைத்துச் சென்ற நிலையில் உயிரை மாய்த்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விடுதி தொழிலாளியின் தாய் நகர சபை ஊழியராகும். அவரது தந்தை குறித்த எந்த தகவலையும் தங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
அவர் சிறுவயதில் இருந்து இந்த விடுதியில் தங்கி வளர்க்கப்பட்டவர். இந்த இளைஞன் பாடசாலை செல்லவில்லை, பிறப்புச் சான்றிதழும் இல்லை. அதன்காரணமாக அவரால் தேசிய அடையாள அட்டையை கூட தயார் செய்ய முடியவில்லை.
திருமணத்திற்கு தடை
இந்த இளைஞன் திருமணம் செய்துகொள்ளும் ஆசையில் காதலியுடன் பழகியுள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ள தயாராக இருந்த போதிலும், அடையாள அட்டையோ, பிறப்புச் சான்றிதழோ இல்லாததால் அந்த இளைஞனால் திருமணம் செய்ய முடியவில்லை.
அந்த இளைஞன் தனக்கான பிறப்புச் சான்றிதழைத் தயாரிக்க முயன்றுள்ளளார். அவர் பிறந்த மருத்துவமனை கூட தாயாருக்கு நினைவில் இல்லை என அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
பிறப்புச் சான்றிதழ் திருமணத்திற்கு தடையாக இருந்தமையால் இந்த இளைஞன் மன உளைச்சலில் இவர்கள் இவரது முடிவை எடுத்திருக்கலாம் என நம்பப்படுகிறது.''என தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்களை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

