காதலியை பார்க்க பேருந்தை திருடிச் சென்ற சிறுவன் கைது..!

Sri Lanka Police Colombo Sri Lanka Police Investigation
By Kanna Sep 13, 2022 01:32 AM GMT
Report

தனது காதலியைப் பார்க்க பிலியந்தலை பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்றை திருடிச் சென்ற சிறுவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்தேகொட சித்தமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது

காதலியை பார்க்க பேருந்தை திருடிச் சென்ற சிறுவன் கைது..! | Teenager Stealed Bus To See His Lover Arrested

பேருந்து சாரதிகள் அனைவரும் இணைந்து ஆசிய கிண்ண இறுதி கிரிக்கட் போட்டியை காண தமது பேருந்துகளில் நேற்று முன்தினம் (11) இரவு பிலியந்தலை பேருந்து நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.

பேருந்து நிலையத்தில் பேருந்துகளை நிறுத்திவிட்டு வேறு இடத்திற்குச் சென்று கிரிக்கெட் போட்டியை பார்த்துக் சென்றுள்ளனர்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு வந்து பார்த்தபோது, ​​அப்போது பேருந்து ஒன்று அங்கு இல்லாததை அவதானித்துள்ளனர். இதனையடுத்து பேருந்து சாரதிகள் உடனடியாக இது தொடர்பில் பிலியந்தலை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

உடனடியாக தலையிட்டு விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர்,  நள்ளிரவு 12.30 மணியளவில் கெஸ்பேவ - பிலியந்தலை வீதியின் வீதித்தடை பகுதியினூடாக பயணித்த பேருந்து மீது சந்தேகம் ஏற்பட்டு அதனை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர்.

அப்போது, ​​கடத்தப்பட்ட பேருந்துதான் சம்பந்தப்பட்ட பேருந்து என்பதை காவல்துறையினர் உறுதி செய்தனர். இதேவேளை, பேருந்தை நிறுத்தி, தப்பி ஓட முயன்ற சிறுவனை துரத்திச் சென்று கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விசாரணையின் பின்னர், அவர் தனது காதலியை பார்க்க சென்றுவிட்டு திரும்பி வந்தபோது காவல்துறையினரிடம் சிக்கியது தெரியவந்துள்ளது.

சிறுவன் அளித்த வாக்குமூலம்

காதலியை பார்க்க பேருந்தை திருடிச் சென்ற சிறுவன் கைது..! | Teenager Stealed Bus To See His Lover Arrested

நேற்றுமுன்தினம் இரவு 8 மணியளவில் மொரகஹஹேன பிரதேசத்தில் வசிக்கும் தனது காதலி தன்னை சந்திக்க வருமாறு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்ததாக குறித்த சிறுவன் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதன்படி, காதலியை சந்திக்க பேருந்தில் பயணிக்க பேருந்து நிலையத்திற்கு வந்ததாகவும் ஆனால் அப்போது பேருந்துகள் இல்லாததால், பல பேருந்துகளில் ஏறி சோதனை செய்ததாகவும் குறித்த சிறுவன் தெரிவித்துள்ளார்.

இதன்போது பேருந்து ஒன்றில் சாவி இருந்ததால் அதனை இயக்கி மொரகஹேன பகுதியில் உள்ள தனது காதலியை சந்திக்க சென்றதாகவும் குறித்த சிறுவன் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேக நபர் இதற்கு முன்னரும் தனது காதலியை சந்திப்பதற்காக பேருந்து ஒன்றை கடத்திச் சென்றுள்ளமை மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபரை கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Nigeria, Toronto, Canada

25 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, Nigeria, Markham, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025