தொலைபேசி கோபுரங்களில் கைவரிசையை காட்டிய சந்தேக நபர்கள் கைது!
தொலைபேசி கோபுரங்களில் பொருத்தப்பட்டிருந்த மின் கலங்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வீரகெட்டிய, தங்காலை,பெலியத்த, ஹக்மன, அம்பலாந்தோட்டை மற்றும் ஹம்பாந்தோட்டை பிரதேசங்களில் உள்ள தொலைபேசி கோபுரங்களில் பொருத்தப்பட்டிருந்த மின் கலங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக கிடைத்த தகவல்களை அடுத்து மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வலஸ்முல்ல, ஹக்மன மற்றும் தங்காலை பிரதேசங்களை சேர்ந்தவர்களே இச் சம்பவங்கள் தொடர்பில் செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றிய வாகனங்கள்
குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து 138 மின் கலங்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதுடன் கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்திய சிறிய சுமை ஊர்தி, முச்சக்கர வண்டி மற்றும் மகிழுந்து ஒன்றையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்
.
இவர்கள் இன்று நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
