டயானா கமகேவிற்கு தொடரும் நெருக்கடி : பாயவுள்ள மற்றுமொரு வழக்கு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே(diana gamage)வுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனம்(Sri Lanka Television Corporation) தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேரலை ஒளிபரப்புக்கு நேரம் ஒதுக்கியது மற்றும் அதற்கான தொகையை செலுத்தத் தவறியதன் அடிப்படையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.
பத்து இலட்சம் ரூபாவை செலுத்தத் தவறிவிட்டதாக
ஏறக்குறைய பத்து இலட்சம் ரூபாவை அவர் செலுத்தத் தவறிவிட்டதாக தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிலுவைத் தொகையை வழங்குமாறு பலமுறை அவருக்குத் தெரிவிக்கப்பட்ட போதிலும், பல்வேறு காரணங்களை கூறி அந்த தொகையை செலுத்தவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
பெரஹெராவை நேரடியாக ஒளிபரப்ப
நவகமுவ பெரஹெராவை நேரடியாக ஒளிபரப்ப தொலைக்காட்சியில் நேரத்தை ஒதுக்கியுள்ள அவர், அதற்கான செலவை தாமே தனிப்பட்ட முறையில் செலுத்துவதாக எழுத்துமூல அறிக்கையையும் கொடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |