தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் பிடியரிசித் திட்டம் ஆரம்பம்
தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் நடைபெறும் அன்னதானத்திற்காக பிடியரிசித் திட்டம் தேவஸ்தான தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களால் இன்றைய தினம் (17.08.2025) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தேசம் போற்றும் அன்னை தெல்லிப்பழை துர்க்காதேவியின் வருடாந்த மஹோற்சவ நாட்களில் தினமும் தேவஸ்தானத்தில் உள்ள அன்னசத்திரத்தில் அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
அன்னதானம் வழங்குவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி
இம்முறையும் அன்னதானம் வழங்குவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
எனவே அடியார்கள் தேவஸ்தானத்தில் பாத்திரம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் வீடுகளிலிருந்து ஒரு கைப்பிடி அரிசி எடுத்து வந்து அந்த பாத்திரத்தில் போட்டு அடியார்களுக்கு உணவு கொடுக்கும் மிக உயர்ந்த புண்ணிய கருமத்தில் பங்கெடுத்து கொள்ளுமாறு தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் அடியவர்களிடம் அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

