யாழில் 33 வருடங்களின் பின் விடுவிக்கப்பட்ட ஆலயத்தில் பாலஸ்தாபன கும்பாபிசேஷகம்
Sri Lanka Army
Jaffna
By Vanan
a year ago
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை மேற்கு, மாங்கொல்லை ஞான வைரவர் ஆலய பாலாலைய கும்பாபிஷேகம் இன்றைய தினம்(26) வியாழக்கிழமை இடம்பெற்றது.
காலை 7 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் பூஜைகள் ஆரம்பமாகி காலை 7.30 மணி தொடக்கம் 9.30 மணிவரையிலான சுப வேளையில் பாலஸ்தாபன கும்பாபிசேஷகம் இடம்பெற்றது.
இராணுவத்தினரின் வெளியேற்றம்
இந்த ஆலயமானது கடந்த 33 வருட காலமாக இராணுவ உயர் பாதுகாப்பு வலய பகுதிக்குள் இருந்த நிலையில் , கடந்த ஜூன் மாத கால பகுதியில் ஆலய சூழலையும் , அதனை அண்டிய சில பிரதேசங்களில் இருந்தும் இராணுவத்தினர் வெளியேறி சென்றிருந்தனர்.
இந்நிலையில், ஆலய புனரமைப்பு வேலைகளை முன்னெடுக்கும் முகமாக பாலஸ்தாபன கும்பாபிசேஷகம் இடம்பெற்றது.






ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
3 நாட்கள் முன்
பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா…
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்