பட்டப்பகலில் களவாடப்பட்ட ஆலய உண்டியல்!(படங்கள்)
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் உண்டியல் களவாடப்பட்டுள்ளதாக அந்த ஆலயத்தின் தலைவர் இ.ரமேஸ் தெரிவித்துள்ளார்.
இச் திருட்டு சம்பவம் இன்று (04) முற்பகல் சுமார் 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஆலயத்தின் தின பூஜை செய்வதற்காக வியாழக்கிழமை சென்ற அவ்வாலய குருக்கள் ஆலயத்தினுள் வைக்கப்பட்டிருந்த உண்டில் இல்லாமல் உள்ளதை அவதானித்துள்ளார்.
ஆலயத்தின் உட்புறத்தை சுற்றிப் பார்த்தவேளை ஆலயத்தினுள் வடக்குப்புறமாக குறித்த உண்டியல் உடைக்கப்பட்டு கிடப்பதை அவதானித்த பின்னர் ஆலய தலைவருக்கு அறிவித்துள்ளார்.
வழக்கமாக ஆலயத்திற்கு பாதுகாவலர் வைப்பதில்லை, கதிர்காம பாதயாத்திரிகர்கள் ஆலயத்திற்கு வந்து செல்வதனால் ஆலயத்தின் முன் வாயிற் கதவு பகலில் திறந்து விடப்பட்டுள்ளன.
திருட்டு சம்பவம்
இந்நிலையில், வியாழக்கிழமை முற்பகல் வேளையில் யாரோ மிகவும் தந்திரத்தனமான முறையில் ஆலயத்தினுள் உட்புகுந்து முன்னால் வைத்திருந்த உண்டியலை எடுத்து ஆலயத்தின் வடக்குப் பக்கமாக கொண்டு வைத்து ஆலயத்திலிருந்த சூலத்தை எடுத்து உடைத்து அதிலிருந்த பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.
மேலும், உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது என்பது எமக்குத் தெரியாது. ஆனாலும் ஆலயத்தின் சொத்துக்களைத் திருடித் தின்பவர்களை தெய்வ பாவம் அவர்களை சும்மா விடாது. இவ்விடையம் குறித்து களுவாஞ்சிகுடி காவல்துறையினருக்கு நாம் அறிவித்துள்ளோம் என ஆலயத்தின் தலைவர் தெரிவித்தார்.







