மலையக மக்கள் விடயத்தில் அரசு கண்ணாம் பூச்சி ஆட்டம் : இராதாகிருஸ்ணன் காட்டம்!

Sri Lanka Upcountry People V S Radhakrishnan Sri Lanka
By Aadhithya Jul 24, 2024 07:13 AM GMT
Report

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான இடைக்கால கொடுப்பனவாக 5,000 ரூபா வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் (V. Radhakrishnan) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அந்தவகையில், பொருட்களின் விலை உயர்வு பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கான நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவு போன்ற காரணங்களால் தொழிளலார்களின் சம்பள உயர்வில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், “பெருந்தோட்ட கம்பனிகள் நீதிமன்ற தடை உத்தரவை காரணம் காட்டி சம்பள உயர்வை வழங்க மறுத்து வருகின்றது. இதன் காரணமாக தொழிலாளர்கள் பெரும் பொருளாதார ரீதியான பாதிப்பை சந்தித்து வருகின்றார்கள். 

வட்டி வீதங்கள் குறைப்பு: இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

வட்டி வீதங்கள் குறைப்பு: இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

பொருளாதார பின்னடைவு 

எனவே, அவர்களுடைய விடயத்தில் அரசாங்கம் மனிதாபிமான ரீதியாக சிந்தித்து செயற்பட வேண்டும். இன்று இலங்கையின் பொருளாதார பின்னடைவு காரணமாக பொருட்களின் விலை அதிகரிப்பானது வானத்தை தொட்டிருக்கின்றது.

மலையக மக்கள் விடயத்தில் அரசு கண்ணாம் பூச்சி ஆட்டம் : இராதாகிருஸ்ணன் காட்டம்! | Temporary 5 000 Pay Urged For Workers

இதன் காரணமாக இலங்கையின் கீழ் மட்டத்தில் இருக்கின்ற மக்கள் தங்களுடைய அன்றாட உணவுத் தேவை உட்டபட இன்னும் பல வேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாத ஒரு நிலையில் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த நிலையில் அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் அரசாங்கத்திற்கு எதிராக பல வேலை நிறுத்த போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள். ஆனால், பெருந்தோட்ட தொழிலாளர்கள் எந்தவிதமான போராட்டமும் இல்லாமல் தங்களுடைய தொழிலை செவ்வனே செய்து வருகின்றார்கள்.

எங்களுடைய தொழிலாளர்களின் வருமானத்தின் மூலமாக ஈரான் நாட்டினுடைய ஒரு தொகுதி கடனையும் தேயிலையையும் வழங்கி அரசாங்கம் கடனை செலுத்தியுள்ளது.

3000 ரூபாயை தாண்டிய இஞ்சி ! உச்சத்தை தொட்ட மரக்கறிகளின் விலை

3000 ரூபாயை தாண்டிய இஞ்சி ! உச்சத்தை தொட்ட மரக்கறிகளின் விலை

சம்பள உயர்வு

ஆனால் அரசாங்கம் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் கண்ணாம் பூச்சி ஆட்டம் ஆடி வருகின்றது. வர்த்தமானி அறிவித்தல், ஜனாதிபதியின் பரிந்துரை என பல விளையாட்டுகள் நடைபெறுகின்றன.

ஆனால் சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை வழங்கியுள்ளது.

மலையக மக்கள் விடயத்தில் அரசு கண்ணாம் பூச்சி ஆட்டம் : இராதாகிருஸ்ணன் காட்டம்! | Temporary 5 000 Pay Urged For Workers

எனவே, அரசாங்கம் நீதிமன்றத்தின் வழக்கு தீர்ப்பு கிடைக்கின்ற வரையில் தொழிலாளர்களுக்கான இடைக்கால கொடுப்பனவாக 5,000 ரூபாவை வழங்க முன்வர வேண்டும். தொடர்ந்தும் பெருந்தோட்ட மக்கள் தங்களை அர்ப்பணித்து இந்த நாட்டிற்காக உழைத்து வருகின்றார்கள்.

கொவிட் கால கட்டாய உடற் தகனம் : பகிரங்க மன்னிப்பு கோரும் சிறிலங்கா அரசாங்கம்

கொவிட் கால கட்டாய உடற் தகனம் : பகிரங்க மன்னிப்பு கோரும் சிறிலங்கா அரசாங்கம்

நாட்டின் நிலைமை

இதனை தேர்தல் காலத்தில் மாத்திரம் வழங்கிவிட்டு நிறுத்திவிடாமல் வழக்கு நிறைவடைகின்ற வரையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களும் தொடர்ச்சியான பணி பகிஷ்கரிப்பில் அல்லது வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கினால் இந்த நாட்டின் நிலைமை என்ன.

மலையக மக்கள் விடயத்தில் அரசு கண்ணாம் பூச்சி ஆட்டம் : இராதாகிருஸ்ணன் காட்டம்! | Temporary 5 000 Pay Urged For Workers

எனவே, இதனை அரசாங்கமும் அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்ற அனைவரும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

ஏனெனில் அரசாங்கம் இடைக்கால கொடுப்பனவை வழங்குவதில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. அது ஒரு மனிதாபிமான செயற்பாடாக கருதி இதனை செய்ய முன்வர வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011