அகழ்வாராய்ச்சிக்கு அனுமதிப் பத்திரங்கள் வழங்க தற்காலிக தடை! அமைச்சர் விடுத்த பணிப்புரை
சுரங்க அகழ்வாராய்ச்சிக்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர (Mahinda Amaraweera) பணிப்புரை விடுத்துள்ளார்.
புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்திற்கு பணிப்புரையை அமைச்சர் விடுத்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில்,
அகழ்வாராய்ச்சிகளால் பாரியளவில் சுற்றாடலுக்குப் பாதிப்பு ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படும் அறிக்கைகளே இதற்குக் காரணம். அகழ்வுப் பணிகளினால் அம்பலாந்தோட்டை - வலேவத்தை கிராமம் முற்றாக அழிவடைந்துள்ளது.
அத்துடன், விவசாயம் செய்யக்கூடிய வயல் நிலங்களும் பொருளாதார ரீதியில் பயன்தரக்கூடிய தென்னை போன்ற பயிரிடப்பட்ட நிலங்களும் அழிந்து வருவதையும் அவதானிக்க முடிகிறது.
இதன் காரணமாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் விசேட குழுவொன்றை நியமித்து, விரிவான விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையை பெற்றுக்கொள்ளவுள்ளவோம்.
அந்த அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
