சுகாதார தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் தற்காலிக இடைநிறுத்தம்
சுகாதார தொழிற்சங்கங்களால் நாளை (19) காலை ஆரம்பிக்கப்படவிருந்த வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
கொழும்பில் இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் அழைப்பாளர் ரவி குமுதேஷ் இதனைத் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சின் எழுத்துமூல கோரிக்கைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
35,000 ரூபாய் கொடுப்பனவு
வைத்தியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 35,000 ரூபாய் கொடுப்பனவை, தமக்கும் வழங்குமாறு கோரி, இந்த தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கவிருந்தனர்.
இதற்கு முன்னர், குறித்த கொடுப்பனவை கோரி, சுகாதார தொழிற்சங்கத்தினர் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
எனினும் எவ்வித முன்னேற்றங்களும் ஏற்படாததினால், மீண்டும் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ஆம் நாள் மாலை - திருவிழா
