அரசாங்கத்தை விட்டு வெளியேற தயாராகும் மொட்டுவின் பத்து சிரேஷ்ட உறுப்பினர்கள்
தான் உட்பட சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் பத்து சிரேஷ்ட உறுப்பினர்கள் பாரிய அநீதிக்கு உள்ளாகியுள்ளதாக சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை விட்டு வெளியேறினால் அந்த பத்து பேரும் வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் கூறினார். ஆனால் நாட்டு மக்களுக்காக அரசாங்கம் முன்னோக்கி செல்ல வேண்டியிருப்பதால் அத்தகைய நடவடிக்கையை எடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோட்டாபயவுக்கு மக்கள் வழங்கிய ஆணை

கோட்டாபய ராஜபக்சவுக்கு 600,000 வாக்குகள் வழங்கப்பட்டு அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு ஆணை வழங்கப்பட்டது. மேலும், தாம் உட்பட மாவட்டத் தலைவர்கள் என்ற ரீதியில் நாட்டு மக்களுக்காக சிரேஷ்டர்கள் இந்த அநீதிகள் அனைத்தையும் இன்னமும் சுமந்து வருவதாகவும் அவர் கூறினார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சுப் பதவிகள் கிடைக்காமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.