பல்கலைக்கழகத்தில் பெரும் பதட்டம்! இரு மாணவர்கள் பலி - துணைவேந்தர் மீதும் தாக்குதல்(படங்கள்)

Vavuniya
By Vanan Aug 17, 2023 02:13 PM GMT
Report

வவுனியா பல்கலைக்கழக மைதானத்திற்கு அருகில் அமைந்துள்ள நீர்நிலையில் இரு மாணவர்கள் தவறி வீழ்ந்து உயிரிழந்த சம்பவத்தால் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று(17) மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் கேள்வியுற்ற பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ரி.மங்களேஸ்வரன் அப்பகுதிக்கு விஜயம் செய்திருந்த நிலையில், அவர் மீதும் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நடந்தது என்ன?

பல்கலைக்கழகத்தில் பெரும் பதட்டம்! இரு மாணவர்கள் பலி - துணைவேந்தர் மீதும் தாக்குதல்(படங்கள்) | Tense Situation In University Of Vavuniya

மேலும் தெரியவருகையில், வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் வலயமட்ட விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தின் மைதானத்தில் இன்று இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் மைதானத்திற்கு அருகாமையில் உள்ள பாரிய நீர் நிரம்பிய கிடங்கில் தவறி வீழ்ந்து மூழ்கியுள்ளனர்.

இதனை அவதானித்த ஏனைய மாணவர்கள் சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினர்.

இதன்போது குறித்த பகுதியில் நின்ற இளைஞர்கள் மற்றும், பொதுமக்கள் ஆகியோர் மூழ்கியவர்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு உதவியாக இராணுவத்தினர் மற்றும் வவுனியா மாநகரசபை தீயணைப்பு பிரிவினரும் அங்கு வருகை தந்திருந்தனர்.

ஒரு மணிநேரத்தின் பின்னர் நீரில் மூழ்கிய இருவரும் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும் ஏற்கனவே அவர்கள் மரணித்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தில் வவுனியா பட்டானிச்சூர் முஸ்லிம் மகா வித்தியாத்தில் கல்விகற்கும் 15மற்றும் 16வயதை உடைய இரு மாணவர்களே உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் கேள்வியுற்ற பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ரி.மங்களேஸ்வரன் அந்த பகுதிக்கு விஜயம் செய்திருந்தார்.

குழப்பமான சூழ்நிலை

பல்கலைக்கழகத்தில் பெரும் பதட்டம்! இரு மாணவர்கள் பலி - துணைவேந்தர் மீதும் தாக்குதல்(படங்கள்) | Tense Situation In University Of Vavuniya

பல்கலைக்கழகத்தில் பெரும் பதட்டம்! இரு மாணவர்கள் பலி - துணைவேந்தர் மீதும் தாக்குதல்(படங்கள்) | Tense Situation In University Of Vavuniya

இதனை அவதானித்த குழுவொன்று அவர் மீது தாக்குதலை முன்னெடுத்தது. இதனால் குறித்த பகுதியில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் அங்கு வருகைதந்த விசேட அதிரடிப்படையினர் நிலமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததுடன், காவல்துறையினரின் பாதுகாப்புடன் துணைவேந்தர் பாதுகாப்பாக அழைத்துச்செல்லப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக பூவரசங்குளம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025