சீனா மற்றும் தைவான் இடையே அதிகரிக்கும் பதட்டம்
தாய்வான் மற்றும் சீனாவுக்கிடையில் (China) நிலவும் பதற்ற நிலை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவின் தாக்குதலுக்கான சாத்தியத்தைக் கருத்திற் கொண்டு, தாய்வான் (Taiwan) இராணுவம் தன்னை தயார்ப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது
அதற்கான ஒரு கட்டமாக, வெவ்வேறு பகுதிகளில் உள்ள இராணுவ முகாம்களுக்கு ஆயுதங்களை சுரங்க தொடருந்துகள் மூலம் விரைவாகக் கொண்டு செல்லும் வகையில் இராணுவம் ஒத்திகைகளை மேற்கொண்டுள்ளது.
சீனாவின் அடுத்த கட்ட நிலைப்பாடு
அதுமட்டுமின்றி பொதுமக்களுக்கு தாக்குதலின் போது தற்காத்துக் கொள்வதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், எதிரி தாக்குதலால் சேதமடைந்த விமான ஓடுபாதைகளை இரவிலேயே சீரமைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும், சீனாவின் அடுத்த கட்ட நிலைப்பாடு எது என்ற குழப்பத்தில் இருக்கும் நிலையில், தாய்வானின் பாதுகாப்பு தயாராகவே உள்ளதென சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

