மொரட்டுவையில் பதற்றம் - விசேட அதிரடிப்படையினர் களத்தில்
protest
stf
moratuwa
By Sumithiran
மொரட்டுவை நகர் பகுதியில் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் வாழ்க்கை செலவினம் அதிகரிப்பு உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பிற்பகல் முதல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
முன்னதாக, மொரட்டுவை நகர முதல்வர் சமன்லால் பெர்னாண்டோவின் இல்லத்தின் மீதும் ஆர்ப்பாட்டக்காரர்களால் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அங்கு தொடர்ந்தும் பதற்றநிலை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நிலைமையினை கட்டுப்படுத்த சம்பவ இடத்திற்கு காவல்துறைக்கு மேலதிகமாக, விசேட அதிரடிப்படையினர் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி