யாழ் வடமராட்சி கிழக்கு கடலில் அதிகாலையில் பரபரப்பு - மூன்றாவது நாளாக தொடரும் மோதல்

Sri Lanka Police Jaffna Sri Lanka Navy Sri Lanka Fisherman
By Thulsi Mar 17, 2025 07:14 AM GMT
Report

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் உள்ள கரைவலை வாடியால் கடற்றொழிலாளர்கள் இடையே மூன்றாவது நாளாக இன்று (17) முறுகல்நிலை தொடர்ந்து வருகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, உழவு இயந்திரத்தை பாவித்து 22 கயிறுகளுக்கு மேல் கரைவலை தொழில் புரிவது சட்ட மீறலாக உள்ள போதும் வெற்றிலைக்கேணி பகுதியில் உள்ள கரைவலை தொழிலாளி ஒருவர் நாளாந்தம் இரண்டு படகுகளில் 150 மேற்பட்ட கயிறுகளை பாவித்து கரைவலை தொழில் புரிந்துவருகின்றார்

இதனால் ஏனைய கடற்றொழிலாளர்களின் வலைகள், படகு, இயந்திரங்கள் பாதிக்கப்படுவதுடன் அவர்கள் தொழில் செய்ய முடியாத நிலை தொடர்ந்து உருவாகி வருகின்றது

கரைவலையில் சிக்குண்ட தொழிலாளி 

வெற்றிலைக்கேணியில் இருந்து 150 மேற்பட்ட கயிறுகளை பாவித்து குறித்த கரைவலை முதலாளி கேவில் கடற்பரப்பு வரை சென்று வருவதால் ஏனைய கடற்றொழிலாளர்கள் தொழில் புரிவதற்கு மாலை நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

யாழ் வடமராட்சி கிழக்கு கடலில் அதிகாலையில் பரபரப்பு - மூன்றாவது நாளாக தொடரும் மோதல் | Tension In The East Of Jaffna North Coastal Area

குறித்த கரைவலை முதலாளியின் செயற்பாட்டால் அவரது கரைவலையில் சிக்குண்ட சிறு தொழிலாளி ஒருவரின் படகு, இயந்திரம் சேதமடைந்துள்ளது

ஏனைய பகுதிகளில் சட்டவிரோதமாக குறித்த கரைவலை முதலாளி தொழில் புரிந்து வந்தமையால் அப்பகுதி மக்களால் அகற்றப்பட்டதன் பின்னரே வெற்றிலைக்கேணி விநாயகர்புரம் பகுதியில் தற்பொழுது தொழில் புரிந்து வருகின்றார்.

தேசபந்து தென்னகோனின் ரிட் மனு ...! நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தேசபந்து தென்னகோனின் ரிட் மனு ...! நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வன்முறையாக மாறும் வாய்ப்பு

அதிகாலை 06.00 பிறகே கரைவலை தொழில் புரிவதற்கு சட்டம் உள்ள போதும் இவர்கள் சட்டத்திற்கு முரணாக நேர காலத்தை மீறி ஏனைய கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திவருகின்றனர்.

யாழ் வடமராட்சி கிழக்கு கடலில் அதிகாலையில் பரபரப்பு - மூன்றாவது நாளாக தொடரும் மோதல் | Tension In The East Of Jaffna North Coastal Area

இதனால் பாதிப்படைந்த கடற்றொழிலாளர்கள் குறித்த கரைவலை முதலாளியுடன் மூன்றாவது நாளாகவும் முறுகலில் ஈடுபட்டுவருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக கடற்தொழில் சமாசத்திற்கும், நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தப்பட்ட போதிலும் நடவடிக்கை எடுக்க தவறுவதால் முறுகல் நிலை வன்முறையாக மாறும் வாய்ப்புள்ளதால் மருதங்கேணி காவல் நிலையத்தில் மூன்றாவது நாளாகவும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

யாழ் வடமராட்சி கிழக்கு கடலில் அதிகாலையில் பரபரப்பு - மூன்றாவது நாளாக தொடரும் மோதல் | Tension In The East Of Jaffna North Coastal Area

செய்தி - கஜிந்தன்

வீதியில் இறங்குவோம்...! அநுர அரசை எச்சரிக்கும் கர்தினால் மல்கம் ரஞ்சித்

வீதியில் இறங்குவோம்...! அநுர அரசை எச்சரிக்கும் கர்தினால் மல்கம் ரஞ்சித்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026