தமிழர் தலைநகரில் ஏற்பட்ட பதற்றம்
திருகோணமலை உட்துறைமுக வீதியில் பேருந்துடன் ஒருவர் மோதுண்டதை அடுத்து குறித்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது
திருகோணமலை உட்துறைமுக வீதியில் வீதியினை கடக்க முற்பட்ட ஒருவரை அவ்வீதியூடாக பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மோதியை அடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்களால் குறித்த பேருந்து அடித்து நொருக்கப்பட்டது.
விபத்துக்குள்ளானவர் கவலைக்கிடமான நிலையில்
குறித்த விபத்தானது இன்று மாலை இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளானவர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பேருந்திற்கு தீ வைக்க முயற்சித்ததையடுத்து, அங்கு வந்த காவல்துறையினர் மக்களை கலைக்க நடவடிக்கை எடுத்தனர். தற்போது பேருந்து காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை காவல்துறையினர் மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் திருகோணமலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். விபத்தினை அடுத்து அவ்வீதியூடான போக்குவரத்து பல மணி நேரங்களுக்கு தடைப்பட்டிருந்தது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        