கனடாவில் ஏற்பட்ட பதற்றம் - சுட்டுக்கொல்லப்பட்ட ஆயுததாரி - மூடப்பட்டன பாடசாலைகள் (படங்கள்)
அமெரிக்காவின் டெக்சாஸில் துப்பாக்கிதாரி
அமெரிக்காவின் டெக்சாஸில் துப்பாக்கிதாரி ஒருவர் தொடக்கப் பாடசாலை ஒன்றில் 19 குழந்தைகளையும் இரண்டு ஆசிரியர்களையும் சுட்டு கொலை செய்த இரண்டு நாட்களுக்குப் பின்னர் கனடாவின் ரொறன்ரோ நகரில் துப்பாக்கிதாரி ஒருவர் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வியாழன் மதியம் இடம்பெற்ற இந்த சம்பவத்தை அடுத்து அருகிலுள்ள ஐந்து பாடசாலைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டதாக நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு
துப்பாக்கிதாரி காவல்துறையை எதிர்கொண்டதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக டொராண்டோ காவல்நிலைய தலைவர் ஜேம்ஸ் ராமர் ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
எனினும், தொடர் விசாரணையை மேற்கோள்காட்டி, அவர் மேலும் விபரங்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டார். அதேவேளை சம்பவத்தில் கொல்லப்பட்ட இளைஞர் 20 வயதுக்கு உட்பட்டவர் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.



நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025
