ரஷ்யா எண்ணெய் கிடங்கில் பயங்கர தீ விபத்து - ஏற்படுத்தியுள்ள பரபரப்பு!
Russia
fire
oil depot
By Thavathevan
ரஷ்யாவின் Kstovo நகரிலுள்ள நிஸ்னி நோவ்கோரோட் (Nizhny Novgorod) பகுதியிலிருக்கும் எண்ணெய்க் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கொளுந்துவிட்டு எரியும் எண்ணெய் கிடங்கிலிருந்து அதிகம் புகை எழுந்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீ அணைக்க போராடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் மற்றும் சேதங்கள் குறித்து தற்போது வரை எந்தவித அதிகாரபூர்வமான தகவலும் வெளியாகவில்லை.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு உலக எண்ணெய் விலையில் புதிய அழுத்தத்தை ஏற்படுத்திய நிலையில் பிரித்தானியா போன்ற ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள் விலை உச்சம் தொட்டுள்ளது.
இதனிடையே, ரஷ்யா எண்ணெய் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி