இலங்கையில் ஏற்படப்போகும் பயங்கர நிலைமை - எச்சரிக்கை விடுத்துள்ள பேராசிரியர்
இலங்கையில் டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ அரிசியின் விலை சுமார் 50% வரை அதிகரிக்கலாம் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
அத்துடன் உள்ளுர் அரிசியின் விலையும் ஏறக்குறைய கிலோ 300 ரூபாவாக அதிகரிக்குமென அவர் மேலும் தெரிவித்தார்.
சீனி, பால் மா, மரக்கறிகள், எரிவாயு, எரிபொருள், பாண், பணிஸ், ஆடைகள், புத்தகங்கள், சப்பாத்து, செருப்புகள் போன்றவற்றின் விலை 35% முதல் 70% வரை அதிகரிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்கள், கார்கள், சிமெந்து, மாபிள்கள் மற்றும் மின்சாதனங்களும் கட்டுப்பாடின்றி உயரும் என அவர் கணித்துள்ளார்.
இந்த நிலைமைகள் நாட்டில் பணவீக்கத்தை மூன்று மடங்காக அதிகரிக்கச் செய்யும் என்றும், ஏழைக் குடும்பங்கள் அடுப்பில் இருந்து நெருப்பில் விழுந்து பிச்சைக்காரர்களாக மாறுவார்கள் என்றும் பேராசிரியர் விஜேவிக்ரம மேலும் தெரிவித்துள்ளார்.
