பயங்கரவாத சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரண் : உயர் நீதிமன்றம் அறிவிப்பு
Parliament of Sri Lanka
Jagath Wickramaratne
High Court of Sri Lanka
By Jaso
'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தின்' சில பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (12)நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
இந்த சட்டமூலம், அரசியலமைப்பின் 121(1) ஆவது பிரிவின் கீழ் உயர் நீதிமன்றத்தில் சவால் செய்யப்பட்டிருந்தது.
உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு
இந்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றும், ஆனால் அதற்கு முன்னதாக குழு நிலையில் தேவையான திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீதிமன்றம் பல திருத்தங்களைப் பரிந்துரைத்துள்ளது; அவற்றில் மூன்றை மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்