பாகிஸ்தானில் காவல் துறையுடன் பயங்கரவாத குழு மோதல்
பயங்கரவாதக் குழுவுக்கும், பாகிஸ்தானில் காவல் துறைக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்த 5 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தானில் போராட்டக் குழுவினர் ஆதிக்கம் நிறைந்த கைபர் பக்துண்க்வா மாகாணத்தில் இன்று காவல் துறைக்கும் ஆயுதமேந்திய பயங்கரவாதக் குழுவினருக்கும் இடையே தீவிர துப்பாக்கிச் சூடு நீடித்துள்ளது.
அதில், 5 பயங்கரவாத குழுக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
30 பயங்கரவாத தரப்பினர்
லக்கி மார்வாட் மாவட்டத்தில் இயங்கி வரும் ஒரு இறையியல் கல்வி நிறுவன வளாகத்தில் நுழைந்த சுமார் 30 பயங்கரவாதக் குழுவினரை, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினர் உள்ளூர் மக்கள் உதவியுடன் சுற்றி வளைத்துள்ளனர்
இதன்போது இருதரப்புக்குமிடையே சண்டை மூண்டதாகவும், இந்தச் சண்டையில் தோல்வியை ஏற்றுக்கொண்டு சரணடைந்துள்ள பயங்கரவாதக் குழுவினர் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
இதையடுத்து, அவர்கள் அப்பகுதியிலிருந்து தப்பிச் செல்லாமல் இருக்க அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைபர் பக்துன்குவா மாகாணத்தின், பஜாவூர், கொஹாட், கராக் ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தத் தாக்குதல்களில் 22 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |