ஈரானில் நடத்தப்பட்ட திடீர் தாக்குதல்: பலர் பலி
ஈரானில்(iran) நீதித்துறை கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் அறுவர் உ்பட தாக்குதல்தாரிகள் என 09 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் 22 பேர் படுகாயமடைந்துள்ளதாக இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது.
ஈரானின் ஜஹேதானில் உள்ள நீதித்துறை கட்டடத்தின் மீது ஜெய்ஷ் அல்-அதில் பயங்கரவாதிகள் திடீரென சரமாரி தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே ஆறு பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் பலத்த காயமுற்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
தாக்குதலுக்கு பொறுப்பேற்ற அமைப்பு
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு, ஜெய்ஷ் அல்-அதில் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. நீதிமன்றத்தைச் சுற்றி துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிச்சத்தங்கள் கேட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து நீதித்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய ஜாஹேதானில் உள்ள நீதித்துறை வளாகத்திற்குள் உள்ள நீதிபதிகளின் அறைக்குள் துப்பாக்கிதாரிகள் நுழைந்தனர். அவர்கள் சரமாரி தாக்குதல் நடத்தியதில் நீதிபதிகள் 13 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குலாளிகளும் உயிரிழப்பு
பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுத்தனர். இதில் பயங்கரவாதிகள் மூன்று பேர் கொல்லப்பட்டதாக இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது.
Gunmen open fire outside a judiciary building in Zahedan, southeast Iran, killing five civilians before being shot dead, in what state media calls a “terrorist attack.#Iran #Zahedan #Attack pic.twitter.com/JJWBrSezPb
— Al Arabiya English (@AlArabiya_Eng) July 26, 2025
இந்தத் தாக்குதல் சம்பவத்தை ஈரான் அதிகாரிகள் கடுமையாகக் கண்டித்துள்ளனர். இது தேசிய பாதுகாப்பை சீர்குலைக்கும் நோக்கம் கொண்ட பயங்கரவாதச் செயல். விசாரணைகள் நடந்து வருகின்றன, மேலும் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை இந்த தாக்குதலின் பின்புலத்தில் இஸ்ரேல் உள்ளதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
