தையிட்டி விகாரை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு : கடற்றொழில் அமைச்சர் உறுதி
தையிட்டி சட்டவிரோத விகாரை பிரச்சினையை சுமூகமான முறையில் தீர்ப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்தே தீருவோம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்.
இன்னும் ஓரிரு மாதங்களில் அந்த பிரச்சினைக்கு அரசாங்கம் முற்றுப்புள்ளி வைக்கும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இன்றைய (22) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், “நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் (S.Shritharan) கொண்டு வரப்பட்ட பிரேரணை மிகவும் சிறப்பானது.
தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படுவதுடன் தையிட்டி பிரச்சினை சுமூகமான முறையில் விரைவில் தீர்க்கப்படும்.
அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி வழங்கப்படுவதுடன், அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து நடவடிக்கை எடுப்போம். 37 வருடங்களாக மூடப்பட்டிருந்த துறைமுகத்தை மக்களுக்கு வழங்கியுள்ளோம்.
மேலும் கடவுச்சீட்டு பெறுவதற்காக இதுவரையும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு வந்தவர்களுக்காக எதிர்வரும் முதலாம் திகதி முதல் கடவுச்சீட்டு அலுவலகத்தை யாழ்ப்பாணத்தில் திறந்து வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
