தையிட்டி விகாரைக்கு அருகில் கைதான ஐவருக்கும் பிணை
Sri Lanka Police
Jaffna
By Vanan
வலி. வடக்கு - தையிட்டி விகாரைக்கு அருகில் பலாலி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பெண் உள்ளிட்ட ஐவரை பிணையில் செல்ல மல்லாகம் நீதவான் நீதிமன்று அனுமதித்துள்ளது.
தையிட்டி விகாரையை அகற்றுமாறு கோரி போராட்டம் நேற்றைய தினம் தொடக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பிணையில் செல்ல அனுமதி
இந்நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை பெண்ணொருவர் உள்ளிட்ட ஐவரை பலாலி காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட ஐவரையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் காவல்துறையினர் முற்படுத்தியதை அடுத்து, நடைபெற்ற விசாரணைகளைத் தொடர்ந்து அவர்கள் ஐவரையும் தலா ஒரு இலட்ச ரூபாய் சரீர பிணையில் செல்ல மன்று அனுமதித்ததுடன், வழக்கினை எதிர்வரும் 11ஆம் திகதிக்கு மன்று திகதியிட்டுள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி