கோமாளி நாடாளுமன்ற உறுப்பினர்கள்.!தையிட்டி போராட்டத்தில் சுகாஷ் ஆவேசம்
புதிய இணைப்பு
கோமாளி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுகாதார அமைச்சராக பதவியேற்கும் ஆசைகள் இருந்தாலும் அதற்காக இனத்தை அடகு வைக்க வேண்டாம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளரும் , சட்டத்தரணியுமான க.சுகாஷ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்ற கூறி இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கொஞ்ச காலம் கடையாற்றிய வைத்தியசாலையையே விட்டு செல்ல உங்களுக்கு கடினமாக இருந்தால், எவ்வாறு மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த காணிகளை விட்டு செல்ல உங்களால் கூறு முடியும் என்றும் அவர் சுகாஷ் கேள்வி எழுப்பினார்.
அத்தோடு, “உண்மையை கூறினால் நீங்கள் அனைவரும் அரசாங்கத்தினுடைய முகவர்கள்” எனவும் அவர் குறிப்பிட்டார்
அண்மையில் ஜனாதிபதி அநுர யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த நிலையில், குறித்த விகாரை தொடர்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்து தெரிவித்தபோது, அந்த விகாரை அமைந்துள்ள காணிக்கு பதிலாக மாற்றுக்காணிகளை பெறுவதற்கு தயாராக இருப்பதாக வடக்கு மாகாண ஆளுநரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இராமநாதன் அர்ச்சுனாவும் தெரிவித்திருந்தனர்.
இந்த கருத்தானது, தமிழ் மக்கள் மத்தியில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் குறித்த விகாரைக்கு எதிராக போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், காணியின் உரிமையாளர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வேலன் சுவாமிகள், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். அமைப்பாளர் டேவிட் நவரட்ணராஜா, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது சங்கத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பினர், சமூகமட்ட அமைப்பினர், பொதுமக்கள் என பலரும் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணம் (Jaffna) - தையிட்டியில் திஸ்ஸ ராஜமகா விகாரை அமைந்துள்ள மற்றும் அதனைச் சூழவுள்ள தனியார் காணிகளை மீள கையளிக்குமாறு தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வருகிறது.
இந்த போராட்டங்களில் காணிகளின் உரிமையாளர்கள் உட்பட அவர்களுக்கு ஆதரவான அரசியல் தரப்புகளும் ஈடுபட்டு வருகின்றன.
போர் நிறைவடைந்த காலப்பகுதியில், சட்டவிரோதமாக கட்டப்பட்ட திஸ்ஸ ராஜமகா விகாரை அமைந்துள்ள காணியை தவிர ஏனைய காணிகளுக்கு மக்களை குடியேற சிறிலங்கா இராணுவம் அனுமதித்திருந்தது.
மக்களை குடிபெயர விடாத நிலையில், அந்த தனியார் காணியில் குறித்த விகாரை இராணுவத்தினரின் உதவியுடன் சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறனதொரு பின்னணியில், ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த போது, அரசாங்க அதிபருக்கு இந்த விகாரை தொடர்பில், அகில இலங்கை பௌத்த மாக சங்கம் என்ற அமைப்பு அப்பட்டமான பொய்கள் அடங்கிய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அந்த கடிதத்தில் கையொப்பம் இட்டுள்ள நபர் இலங்கையின் புலனாய்வு பிரிவு ஒன்றில் முப்பது வருடங்களுக்கு முன்னதாக பணியாற்றிய ஒருவர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், குறித்த கடித்தில் முற்று முழுவதுமாக உண்மைக்கு புறம்பான வரலாறுகள் திரிபுபடுத்தப்பட்டு, இந்த காணிகளை பௌத்த காணிகளாக காட்டுவதற்காக புனையபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவித்த விடயங்கள் கீழுள்ள காணொளியில்,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)