அதிகாரம் என்னிடம் இல்லை- குற்றச்சாட்டை முற்றாக மறுக்கிறார் நாமல்
அதிகாரம் எனக்கு இல்லை
எந்தவொரு அரச நிறுவனத்திற்கும் ஊழியர்களையோ அதிகாரிகளையோ நியமிக்கும் அதிகாரம் தனக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட நேற்று வெளியிட்ட கருத்து தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
The allegations by Pubudu Jayagoda are completely false I held no auth. to make any apptmnts to any of these offices.All apptmnts were made by the committee appointed by HE @GotabayaR even the apptmnts of the institutions under my previous portfolio were made by this committee!
— Namal Rajapaksa (@RajapaksaNamal) June 24, 2022
குற்றச்சாட்டு முற்றிலும் பொய்
எனினும், இந்த குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரச நிறுவனங்களுக்கான அதிகாரிகளை நியமிப்பது அரச தலைவரால் நியமிக்கப்பட்ட குழுவினால் மேற்கொள்ளப்பட்டதாகவும், தான் வகித்த அமைச்சுக்களுக்கான அதிகாரிகளையும் அந்தக் குழுவே நியமித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
