புதிய மின்சார சட்டமூலம் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
சிறிலங்காவில் தயாரிக்கப்படும் புதிய மின்சார சட்டமூலத்தின் ஊடாக பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுமாயின் எதிர்வரும் காலங்களில் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மின்சார சேவையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று (08) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால் இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை, மின்சார துறையை மறுசீரமைக்கும் நடவடிக்கைக்கு அமைய, 54 வருடங்கள் பழமையான இலங்கை மின்சார சபை சட்டம் உள்ளிட்ட சில சட்டங்களை ரத்து செய்வது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
6 வகையான புதிய வரிகள்
இதன் அடிப்படையில், இலங்கை மின்சார சபை பிரதான 10 நிறுவனங்களின் கீழ் பிரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், புதிய மின்சார சட்டமூலத்துக்கு அமைவாக, மின்சார பட்டியலில் புதிதாக 6 வகையான வரிகள் உட்படுத்தப்படுவதாக மின்சார பாவனையாளர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
கொழும்பில் நேற்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவித்த, அந்த சங்கத்தின் தலைவர் எம்.டி.ஆர்.அத்துல இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |