கோர விபத்தில் சிக்கிய பேருந்து..! ஒருவர் பலி - 7 பேர் படுகாயம்
Colombo
Accident
Death
By Kiruththikan
ஹோமாகம - தலகல பகுதியில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த பகுதியில் தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
திருமண நிகழ்வொன்றுக்காக சென்ற பேருந்து, மீள திரும்பிய போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
