“என் சாவுக்குக் காரணம்”- எழுதியது யார்? இஷாலினியின் அப்பியாச கொப்பிகள் தேடி எடுப்பு
police
investigation
richard bathiudeen
ishalini
By Sumithiran
“என் சாவுக்குக் காரணம்” என எழுதப்பட்ட வாக்கியத்தை சிறுமி இஷாலினி எழுதினாரா என்பதை கண்டு பிடிக்கும் நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி சிறுமியின் பாடசாலை அப்பியாசக் கொப்பிகள் சிலவற்றை புலனாய்வு திணைக்களத்தினர் தேடி எடுத்துள்ளனர் என்றும் அவற்றை பரிசோதனை செய்து பார்ப்பதற்காக அப்பியாசக் கொப்பிகள் அரசாங்க பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரிஷாத்தின் வீட்டில் பணியாற்றிய சிறுமி இஷாலினி தங்கியிருந்த அறையின் சுவரில் எழுதப்பட்ட வாக்கியம் தொடர்பிலான கையெழுத்தை நேற்றைய தினம் பரிசோதனை செய்ததாக அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி