செம்மணியில் அடித்து நொருக்கப்பட்ட அணையா விளக்கு தூபி

Sri Lankan Tamils Jaffna SL Protest chemmani mass graves jaffna
By Kanooshiya Oct 09, 2025 08:08 AM GMT
Report

🔴 புதிய இணைப்பு

செம்மணியில் மனித புதைகுழி அடையாளம் காணப்பட்ட பகுதியில் சேதப்படுத்தப்பட்ட அணையா விளக்கு தூபியின் புனரமைப்பு பணிகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நேற்றிரவு (08.10.2025) குறித்த அணையா விளக்கு தூபி அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டிருந்தது.

🔴 முதலாம் இணைப்பு

செம்மணியில் மனித புதைகுழி அடையாளம் காணப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அணையா விளக்கு தூபி அடித்து நொருக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழி மீதான இருள் நீங்கவும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்திற்கு சர்வதேச நீதி கோரியும் யாழ்ப்பாணத்தின் செம்மணி பகுதியில் ”அணையா விளக்கு” போராட்டம் “மக்கள் செயல்” எனப்படும் தன்னார்வ இளையோர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

அங்கு கடந்த ஜூன் மாதம் 23, 24 மற்றும் 25 ஆம் தினங்களில் அணையாவிளக்கு ஏற்றும் சிறு தூபி அமைக்கப்பட்டு அதில் தீபம் ஏற்பட்டது.

அநுர அரசாங்கத்தில் ஐந்தாவது மதிப்பாய்வு! ஒப்பந்தத்தை எட்டிய IMF

அநுர அரசாங்கத்தில் ஐந்தாவது மதிப்பாய்வு! ஒப்பந்தத்தை எட்டிய IMF

அணையா விளக்கு போராட்டம்

இதேவேளை, ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி வரை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் சுழற்சி முறையிலான உண்ணாவிரதமும் அந்த தூபியில் விளக்கேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டு பின்னர் இறுதி நாளிலும் தீபம் ஏற்றி உண்ணாவிரம் நிறைவு செய்யப்பட்டது.

செம்மணியில் அடித்து நொருக்கப்பட்ட அணையா விளக்கு தூபி | The Chemmani Has Been Damaged

இந்நிலையில், நேற்று (08.10.2025) செம்மணியில் இருந்த குறித்த சிறு தூபி அடித்து நொருக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவமானது போராட்டத்தை முடக்குவதை நோக்காக கொண்டதா என்ற கேள்வியை மக்கள் எழுப்புகின்றனர்.

அநியாயத்திற்கு எதிரான குரலாக அமைக்கப்பட்டிருந்த அணையா விளக்கு தூபிக்கே அநியாயம் ஏற்பட்ட விடயம் மக்கள் மத்தியில் விசனத்தையும், மிகுந்த எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 


செம்மணியில் அடித்து நொருக்கப்பட்ட அணையா விளக்கு தூபி | The Chemmani Has Been Damaged

அடுத்த தேர்தலுக்கு தயாராகும் இலங்கை! அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு

அடுத்த தேர்தலுக்கு தயாராகும் இலங்கை! அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026