போர்குற்ற உண்மைகளை மூடிமறைக்கும் செம்மணி அறிக்கை! பிரித்தானிய தமிழர் பேரவை விசனம்
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சுயாதீன சர்வதேசத் தடயவியல் விசாரணை வேண்டும் என்று பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் வெளியிட்டுள்ள ஓர் அவசர ஊடக அறிக்கையில் இதனை கூறியுள்ளது.
செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள், ஒரு தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரிடரால் ஏற்பட்டிருக்கலாம் என்ற பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் கருத்துக்கு BTF தனது பலத்த விசனத்தைத் தெரிவித்துள்ளது.
பேராசிரியர் ராஜ் சோமதேவா குடியேற்றக் கால மற்றும் வரலாற்றுக்கு முந்தைய தொல்லியலில்தான் நிபுணத்துவம் பெற்றவர் என்றும், அவருக்கு தடயவியல் தொல்லியல் (Forensic Archaeology) அல்லது தடயவியல் மானுடவியலில் (Forensic Anthropology) போதிய தகுதிகள் இல்லை என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இத்தகைய யூகங்கள், சட்டவிரோதக் கொலைகள் பற்றிய உண்மைகளை மூடிமறைக்க அல்லது திசைதிருப்பப் பயன்படுத்தப்படலாம் என கவலை வெளியிடப்பட்டுள்ளது.








| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |