பிரபல நடிகையின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்
பிரபல நடிகை தமிதா அபேரத்ன (Damita Abeyratne)மற்றும் அவரது கணவரை குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் கைது செய்வதை தடுக்கும் இடைக்கால தடை உத்தரவை பிறப்பிக்க வேண்டுமென அவர் சமர்ப்பித்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (02) நிராகரித்துள்ளது.
வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்தமை தொடர்பான வழக்கிலேயே மேன்முறையீட்டு நீதிமன்றம் மேற்படி நிராகரிப்பை பதிவு செய்துள்ளது.
சட்டத்தரணிகள் ஊடாக சமர்ப்பித்த ரிட் மனுவை
தமிதா அபேரத்ன தனது சட்டத்தரணிகள் ஊடாக சமர்ப்பித்த ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகளான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மீண்டும் விசாரணைக்கு
முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த பெஞ்ச், மனுதாரரை கைது செய்வதை தடுக்க இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டாம் என்று முடிவு செய்து, மனுவை விசாரிக்க எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
அதன்பிறகு, மனுவை மே 16-ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |