கோட்டாபயவின் உத்தரவுக்கு தடைபோட்டது நீதிமன்றம்

court gotabaya order
By Jaso Aug 06, 2021 06:00 PM GMT
Report

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் பிறப்பிக்கப்பட்ட “கடும் அடிப்படைவாத கொள்கைகளிலிருந்து மீட்கும் உத்தரவு” அமுல்படுத்துவதை இடைநிறுத்தும் வகையில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜனாதிபதியின் உத்தரவு அமுல்படுத்தப்படுவதனை தடுக்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு ஊடகவியலளார்கள் சிலரும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, ஊடகவியலாளர்களான லக்னாத் ஜயகொடி, காவிந்தியா கிறிஸ்டோபர் தோமஸ் மற்றும் செயற்பாட்டாளர் ஷ்ரின் சரூர் ஆகியோர் தாக்கல் செய்த மனு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதோடு, இந்த தடை உத்தரவு எதிர்வரும் 24ம் திகதி வரையில் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மர்து பெர்னாண்டோ, யசந்த கோட்கொட மற்றும் அசல வெங்கப்புலி ஆகிய மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த மனுவை பரிசீலனை செய்தது.

1979 ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் மார்ச் 12 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் வெளியிடப்பட்ட 2218/68 / 2021 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக, சட்டத்தின் பத்தி 27 இன் கீழ், "கடும் அடிப்படைவாத கொள்கைகளிலிருந்து மீட்கும் உத்தரவு" என்ற தலைப்பில் ஒரு விதிமுறை அறிவிக்கப்பட்டது.

அந்த விதிமுறைகளின் கீழ், எந்தவொரு நீதித்துறை செயன்முறை அல்லது சான்றுகள் இல்லாமல் எவரையும் கைது செய்து புனர்வாழ்வு என்ற பெயரில் தடுத்து வைக்க முடியுமென மனுதாரர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், தனிநபர் சுதந்திரத்திற்கான அரசியலமைப்பு உரிமை மற்றும் அடிப்படை மனித உரிமைகளுக்கு கடுமையாக அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அந்த விதிமுறைகள் அரசியலமைப்பின் பிரிவு 10, 11, 12.1, 12.2, 13.1, 13.2, 13.4, 13.5, 13.6, 13.1 (பி), 14.1 (ஈ) மற்றும் 17 ஆகியவற்றை நேடியாக மீறுவதால், இந்த மனுவை விசாரணைக்கு எடுப்பதோடு, தொடர்புடைய விதிமுறைகள், தங்களின் மற்றும் நாட்டின் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக அமைந்துள்ளதால், இந்த விதிமுறைகள் அமுல்படுத்தப்படுவதை தடுக்கும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

புதிய விதிமுறைகள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு முறையாக நிறைவேற்றப்பட்டதா என்றும் மனுவில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மனுதாரர்கள் சார்பில் விரான் கொரெயா, சுரேன் பெர்னாண்டோ, புலஸ்தி ஹேவமான்ன மற்றும் மஞ்சுள பாலசூரிய ஆகியோர் முன்னிலையாகினர், மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புல்லே மற்றும் அரச தரப்பு சட்டத்தரணி அவந்தி பெரேரா ஆகியோர் சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையாகினர். 

ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி