இலங்கைக்குள் நேரடி முதலீடுகளை ஊக்குவிக்க அவுஸ்திரேலியா விருப்பம்

Anura Kumara Dissanayaka Sri Lanka Australia Cuba
By Sathangani Oct 02, 2024 10:40 AM GMT
Report

புதிய இணைப்பு

இலங்கைக்குள் நேரடி முதலீடுகளை (FDIs) ஊக்குவிக்க அவுஸ்திரேலியா விருப்பத்துடன் இருப்பதாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன் (Paul Stephens) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (02) நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், இலங்கையுடனான தொடர்புகளை மேலும் பலப்படுத்திக்கொள்ள அர்ப்பணிப்பதாகவும் உறுதியளித்தார்.

அவுஸ்திரேலியாவின் உதவி 

சமுத்திர பாதுகாப்பு, எல்லை நிர்ணயம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இலங்கைக்கு, அவுஸ்திரேலியா தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கும் என்றும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

இலங்கைக்குள் நேரடி முதலீடுகளை ஊக்குவிக்க அவுஸ்திரேலியா விருப்பம் | The Cuban Ambassador Meets The President Anura

சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் வேலைத்திட்டத்திற்கு அவுஸ்திரேலியாவின் உதவி கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பலப்படுத்திக்கொள்ளும் தீர்மானமிக்க காரணியாக விளங்கும் பொருளாதார வௌிப்படைத்தன்மையை பாதுகாப்பதன் முக்கியதுவத்தையும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் வலியுறுத்தினார்.

முதலாம் இணைப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) மற்றும் இலங்கைக்கான கியூபா தூதுவர் அண்ட்ரஸ் மார்ஷலோ கொன்ஷாலேஸ் கொரிடோ (Andres Marcelo Gonzales Gorrido) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால இராஜதந்திர தொடர்புகள் மற்றும் நட்புறவுகளை பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாதிருக்க தீர்மானம்: காரணத்தை வெளியிட்ட முன்னாள் எம்பி

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாதிருக்க தீர்மானம்: காரணத்தை வெளியிட்ட முன்னாள் எம்பி

ஜனாதிபதிக்கு பாராட்டு 

ஜனாதிபதி தேர்தலில் பெற்றுக்கொண்ட வெற்றிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு வாழ்த்துத் தெரிவித்த கியூபா தூதுவர், ஜனாதிபதியின் தலைமைத்துவத்திற்கு பாராட்டு தெரிவித்தார்.

இலங்கைக்குள் நேரடி முதலீடுகளை ஊக்குவிக்க அவுஸ்திரேலியா விருப்பம் | The Cuban Ambassador Meets The President Anura

அத்துடன் இலங்கையுடனான ஒத்துழைப்புக்களை பலப்படுத்த கியூபா எதிர்பார்த்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

அதேபோல் டெங்கு ஒழிப்புக்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு கியூபா அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு வழங்கப்படுமென இதன்போது உறுதியளிக்கப்பட்டது.

டெங்கு ஒழிப்புச் செயற்பாடுகளில் கியூபா பெற்றுள்ள வெற்றிகள் தொடர்பில் சுட்டிக்காட்டிய கியூபா தூதுவர், இலங்கைக்கு டெங்கு ஒழிப்புக்கு அவசியமாக பொதுச் சுகாதார வேலைத்திட்டங்கள் தொடர்பிலான நிபுணத்துவ அறிவைப் பகிர்ந்துகொள்வதில் ஆர்வமாக இருப்பதாகவும் அறிவித்தார்.

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்த அமெரிக்க தூதுவர்

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்த அமெரிக்க தூதுவர்

பொதுத் தேர்தலில் ஐ.தே.க எந்த சின்னத்தில் போட்டியிடும் : வெளியாகவுள்ள அறிவிப்பு

பொதுத் தேர்தலில் ஐ.தே.க எந்த சின்னத்தில் போட்டியிடும் : வெளியாகவுள்ள அறிவிப்பு



 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வெள்ளவத்தை

01 Feb, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Montreal, Canada, Vancouver, Canada

31 Jan, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை, London, United Kingdom

27 Jan, 2026
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சாய் தெற்கு, Rinteln, Germany

07 Feb, 2025
17ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Wellington, New Zealand

06 Feb, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, கொழும்பு

06 Feb, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Oslo, Norway

28 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கிளிநொச்சி, பேர்ண், Switzerland

04 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, வவுனியா

06 Feb, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Glattbrugg, Switzerland

20 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாசார் பளை, நீராவியடி, யாழ்ப்பாணம்

10 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Speyer, Germany, Kassel, Germany

07 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மல்லாகம், மானிப்பாய், Redbridge, United Kingdom

01 Feb, 2026
மரண அறிவித்தல்

மிருசுவில், Bonn, Germany

28 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Markham, Canada

07 Feb, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Vancouver, Canada

06 Feb, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Toronto, Canada

06 Feb, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Feb, 2013
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, வேலணை 1ம் வட்டாரம்

06 Feb, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Le Blanc-Mesnil, France

05 Feb, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், Dillenburg, Germany

04 Jan, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Scarborough, Canada

01 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, யாழ்ப்பாணம்

07 Feb, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

05 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, பேர்லின், Germany

19 Jan, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம்

05 Feb, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

4th ward,Puthukkudiyiruppu, Mullaitivu, London, United Kingdom

04 Feb, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, Islington, United Kingdom

28 Jan, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026