அதிபர் தேர்தலைப் பிற்போடுவது நல்லது : சி. வி. விக்னேஸ்வரன் பகிரங்கம்
அதிபர் தேர்தல் பிற்போடப்பட்டால் நாட்டிற்கு நன்னை கிடைக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி. வி. விக்னேஸ்வரன் (C. V. Vigneswaran) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் இன்று (04) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தேசிய அரசாங்கம் அமைப்பது நாட்டுக்கு நல்லது ஆனால் தமிழ்க் கட்சிகள் தேசிய அரசாங்கத்தில் இணைவது பொருத்தமானதல்ல.
தமிழ்க் கட்சிகள்
தமிழ் மக்களின் பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கக்கூடிய தேசிய அரசாங்கத்தை தமிழ் கட்சிகள் ஒன்றிணைக்க வேண்டும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.
அத்தோடு இப்போது தேர்தல் நடைபெற்றால் எந்த வேட்பாளரும் 50% வாக்குகளைப் பெற முடியாது. பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு நிலையான ஆட்சி அமைய வேண்டும்.
அதிபர் தேர்தல்
ஆனால் தற்பொழுது தேர்தல் நடைபெற்று குறுகிய காலத்தில் ஆட்சி மாறினால் பாரிய பிரச்சினை ஏற்படும். இந்த நாட்டில் இன்னொரு பிரச்சினை ஏற்பட்டால், நாட்டை மீட்க முடியாது.
மக்களின் பாதுகாப்பு தொடர்பிலும் நாம் சிந்திக்க வேண்டும். ஆகவே தேர்தலைப் பிற்போட வேண்டும் என்பதே எனது கருத்து“ என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |