ஹர்த்தாலால் திசை திருப்பப்பட்ட தமிழ் மக்கள்: மாயமான செம்மணி விவகாரம்
தமிழர் தரப்பில் மாத்திரமன்றி சர்வதேச தரப்பிலும் கடந்த சில மாதங்களாக பாரிய பேசுபொருளுக்கு உள்ளாகி இருந்த விடயம் யாழ் (Jaffna) செம்மணி மனித புதைக்குழி விவகாரம்.
காணாமலாக்கப்பட்ட தமிழ் மக்கள், இராணுவத்தினரால் கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற ரீதியில் பலதரப்பட்ட கோரிக்கைகள், அறிக்கைகள் மற்றும் சர்வதேச நாடுகளின் கண்டனங்கள் என பாரிய சர்ச்சைகளுக்கு மத்தியில் அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் சம்பந்தப்பட்ட இராணுவத்தினர், தமிழர் பிரதேசத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் மற்றும் மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் முதன்மை பெற வேண்டும் என்ற அடிப்படையில் சர்வதேச நாடுகளிடம் இருந்து பலதரப்பட்ட கண்டனங்கள் வெளியாகி தமிழ் மக்களுக்கு பதில் அழிக்க வேண்டிய கட்டாயத்தை இலங்கை அரசாங்கத்திற்கு உருவாக்கி இருந்தது.
இருப்பினும், அண்மைய நாட்களாக சில விடங்களால் செம்மணி விவகாரம் புறந்தள்ளப்பட்டு சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரனால் (M.A. Sumanthiran) மேற்கொள்ளப்பட்ட கடையடைப்பு போராட்டம் பேசுபொருளுக்கு உள்ளாகியுள்ளது.
காரணம்,
- சுமந்திரன் தரப்பு சரியா ? தவறா ?
- கடையடைப்பு போராட்டம் யாரால் முன்னெடுக்கபட்டது ?
- தமிழரசு கட்சி தனிநபரால் வழிநடத்தப்படுகின்றதா ?
- கடையடைப்பு பேராட்டம் வெற்றி பெற்றதா ? இல்லையா ?
என்ற அடிப்படையில் மக்கள் முழு கவனத்தையும் அங்கு செலுத்துவதற்கான ஒரு சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்கள் உட்பட தமிழ் மற்றும் தென்னிலங்கை ஊடகங்கள் வரை இந்த கடையடைப்பு போராட்டம் பேசுபொருளுக்கு உள்ளாகியுள்ள நிலையில், தொடர்ச்சியாக குரல் கொடுக்கப்பட்டு வந்த செம்மணி விவாகரம் இதில் காணாமலாக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏற்படப்போகும் விளைவுகள், தமிழர் தரப்பில் இடம்பெற்ற கடையடைப்பு போராட்டம், செம்மணி விவகாரம் தொடர்பில் வெளியாகி இருந்த சர்வதேச அறிக்கைகள் மற்றும் அரசாங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்பவை தொடர்பில் விரிவவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய செய்திக்கு அப்பால் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
