அடுத்த வாரமும் சுவிஸ் திரையரங்குகளில் திரையிடப்படவுள்ள போராட்டம் திரைப்படம்
சுவிஸ் திரையரங்குகளில் மக்கள் பேராதரவோடு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் "போராட்டம்" திரைப்படம், மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க அடுத்த வாரமும் திரையிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஸ்கரன் கந்தையாவின் தயாரிப்பில், ராஜ் சிவராஜ் இயக்கத்தில், பூவன் மதீசனின் இசையமைப்பில் உருவான படைப்பான "போராட்டம்" திரைப்படம் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
எமது அடுத்த தலைமுறையினர் பார்க்க வேண்டிய ஒரு முக்கிய திரையோவியமாகப் பாராட்டப்படும் இத்திரைப்படம், சுவிட்சர்லாந்தின் லுகானோ (Lugano) மற்றும் சூரிச் (Zürich) ஆகிய முக்கிய நகரங்களில் மீண்டும் திரையிடப்படவுள்ளது.
இத்திரைப்படத்திற்கான நுழைவுக் கட்டணம் 20.- CHF (சுவிஸ் பிராங்குகள்) மட்டுமே என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு +94 70 341 4565 என்ற வாட்ஸ்அப் (WhatsApp) இலக்கம் ஊடாகத் தொடர்புகொண்டு விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
லுகானோ (Lugano)
திரையரங்கு: CineStar
முகவரி: Via Giacomo e Filippo Ciani 100, 6900 Lugano
திகதி - நேரம்: 10.10.2026 சனிக்கிழமை, பிற்பகல் 02.00 மணி(14.00)
தொடர்புகளுக்கு: செல்வா (076 493 05 94), சிவா (078 718 25 05), கோபால் (079 290 00 03)
சூரிச் (Zürich)
திரையரங்கு: Cinema Claudia
முகவரி: Schaffhauserstrasse 76, 8302 Kloten
திகதி - நேரம்: 10.10.2026 சனிக்கிழமை, இரவு 08.00 மணி(20.00)
தொடர்புகளுக்கு: மகி (079 443 44 94), சசி (076 348 97 35), கண்ணன் (079 888 88 44)

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |