மூன்றாம் உலகப்போரில் முதல் குண்டு லண்டன்மீதுதான் -ரஷ்யா விடுத்துள்ள அச்சுறுத்தல்
மூன்றாவது உலகப்போர்
மூன்றாவது உலகப் போரில் முதலில் வீசப்படும் வெடிகுண்டு லண்டன் மீது தான் என்று ரஷ்ய அரச தலைவர் விளாடிமிர் புடினின் நெருங்கிய கூட்டாளி அச்சுறுத்தியுள்ளார்.
விளாடிமிர் புடினின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரும், ரஷ்ய நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக் குழுவின் உறுப்பினருமான, ரிசர்வ் ஜெனரல் எம்.பி ஆண்ட்ரே குருலியோவ் (Andrey Gurulyov), 54, இவ்வாறு அதிர்ச்சிகர தகவலை தெரிவித்துள்ளார்.
லண்டன் மீது தான் முதல் ஏவுகணை
நேட்டோ போல்டிக் நாடுகள் மீதான ரஷ்ய படையெடுப்பை ஆதரிக்கும் ஆண்ட்ரே குருலியோவ், மூன்றாம் உலகப்போர் வருமானால், ரஷ்யா, முதலில் "வோர்சோ, பாரிஸ் அல்லது பெர்லினை" குறிவைக்காது, பதிலாக முதல் ஏவுகணை லண்டன் மீது தான் ஏவப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
அரசு தொலைக்காட்சியான Channel One Russia-விற்கு பேட்டியளித்த ஆண்ட்ரே குருலியோவ், ரஷ்யாவை முற்றுகையிடும் மேற்கு நாடுகளைத் தடுக்க வேறு வழியில்லை என்றார்.
அத்தகைய நடவடிக்கை நேட்டோவின் பிரிவு ஐந்தையும், மூன்றாம் உலகப் போரையும் தூண்டும். "முதல் விமான நடவடிக்கையின் போது எதிரியின் விண்வெளி செயற்கைக்கோள்களின் முழுவதையும் அழிப்போம்" என்று கூறினார்.
அனைவரையும் நேட்டோவாகப் பார்ப்போம்
"அவர்கள் அமெரிக்கர்களாகவோ அல்லது பிரித்தானியராகவோ இருந்தால் யாரும் கவலைப்பட மாட்டோம், நாங்கள் அனைவரையும் நேட்டோவாகப் பார்ப்போம். இரண்டாவதாக, எல்லா இடங்களிலும் மற்றும் 100 சதவீதம் ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு முழு அமைப்பையும் குறைப்போம்.
.
மூன்றாவதாக, நாங்கள் நிச்சயமாக வோர்சோ, பாரிஸ் அல்லது பெர்லினில் இருந்து தொடங்க மாட்டோம். முதலில் தாக்கப்படுவது லண்டன் தான்" என்று அவர் கூறியுள்ளார்.