இலங்கைக்கு சுற்றுலா வந்தவர்களுக்கு அமோக வரவேற்பு
Bandaranaike International Airport
Sri Lanka Tourism
Poland
By Jaso
போலந்திலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்தவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமோக வரவேற்பு அளிக்ப்பட்டுள்ளது.
போலந்து தலைநகர் வோர்சோவிலிருந்து 186 பயணிகள் இலங்கைக்கு சுற்றுலாதாரிகளாக வருகை தந்திருந்தனர்.
குளிர்காலத்தில் போலந்து சுற்றுலா பயணிகள்
இந்த குளிர்காலத்தில் போலந்து சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவது இது 13வது முறையாகும்.

நவம்பர் 2023 முதல் மார்ச் 2024 வரை போலந்திலிருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வர உள்ளனர்.
வரலாற்று இடங்கள் பார்வை
இந்த போலந்து சுற்றுலாப் பயணிகள் அனுராதபுரம், பொலனறுவை, சிகிரியா, உனவட்டுன, அறுகம் பே கடற்கரைகள் மற்றும் இலங்கை பூங்காக்கள் போன்ற வரலாற்று இடங்களை பார்வையிடவுள்ளனர்.
