பூப்புனித நீராட்டு விழாவுக்கு வந்த குழுவை விரட்டிய அதிகாரிகள்
corona
sri lanka
people
ahangama
By Shalini
சுகாதார வழிகாட்டுதல்களை மீறி அஹங்கம பிரதேசத்தில் இன்று (8) நடைபெற இருந்த பூப்புனித நீராட்டு விழா தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அஹங்கம பொது சுகாதார ஆய்வாளர் எம்.பி கயான் அசங்க தெரிவித்தார்.
பொதுச் சுகாதார ஆய்வாளர் கயான் அசங்கவுக்கு கிடைத்த தகவலை அடுத்து, பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
குறித்த நிகழ்வு நடைபெற இருந்த வீட்டில் சுமார் ஐம்பது பேர் இருந்ததாகவும், அவர்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், தொற்றுநோயை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளை மீறிய குற்றச்சாட்டு தொடர்பாக இந்த வீட்டின் உரிமையாளர் மீது வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி