ஊடகங்களை அடக்க வேண்டிய தேவை எமக்கில்லை! கெஹெலிய பதிலடி

Keheliya Rambukwella Journalist SLPP SriLanka Media Freedom
By Chanakyan Jul 13, 2021 09:13 AM GMT
Report

ஊடகங்களினதும்,பொது மக்களினதும் பேச்சு சுதந்திரத்தை முடக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது. நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் கடந்த வாரம் இடம் பெற்ற போராட்டத்தின் போது பாதுகாப்பு தரப்பினரால் தாக்கப்பட்டதாக குறிப்பிடப்படும் ஊடகவியலாளர்கள் முதலில் முறைப்பாடளிக்க வேண்டும். முறைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் அந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

ஊடகவியலாளர்களினதும், நாட்டு மக்களினதும் பேச்சு சுதந்திரத்தை முடக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது.

அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள பேச்சு சுதந்திரத்தை ஒரு தரப்பினர் தவறான வழியில் பயன்படுத்தும் போது அதற்கு எதிராக நடவடிக்கைகள் உரிய நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும். இதனை பேச்சு சுதந்திரத்திற்கு எதிராக அரசாங்கம் செயற்படுகிறது என்று குறிப்பிட முடியாது.

நாட்டு மக்களுக்கு உண்மையான தகவல்களை வழங்கும் பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு, ஊடகங்களின் செயற்பாடுகளை கண்காணிக்கும் பொறுப்பு ஊடகத்துறை அமைச்சுக்கு உள்ளது.

இவ்விடயத்தில் பொறுப்புடன் செயற்படுவோம். நாட்டு மக்கள் உண்மை விடயங்களை அறிந்துக் கொள்ள வேண்டும். கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திந்கு எதிராக கடந்த வாரம் நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது போராட்டகாரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது.

இதன் போது செய்தி சேகரிப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்ட ஊடகவியலாளர்கள் மீது பொலிஸார் தாக்குதலை முன்னெடுத்ததாக குறிப்பிடப்படுகிறது. இச்சம்வபத்தினால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் இருப்பின் அவர் முதலில் முறைப்பாடளிக்க வேண்டும்.

அவர் வழங்கும் முறைப்பாட்டை அடிக்கடையாகக் கொண்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்விடயம் தொடர்பில் ஊடகத்துறை அமைச்சர் என்ற ரீதியில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தையினை முன்னெடுத்துள்ளேன்.

தனியார் ஊடகத்திற்கு எதிராக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் கடந்த வாரம் நாடாளுமன்றில் உரையாற்றினார். இதில் எவ்வித உண்மை தன்மையும் கிடையாது ஒரு சில ஊடகங்களின் செயற்பாடுகள் ஊடக கொள்கைக்கு முரணாக காணப்படுகிறது.

அதற்கு முன்னெடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசனை கோரப்பட்டது. இதனை எவ்வாறு தவறான செயற்பாடு என்று குறிப்பிட முடியும். சட்ட கட்டமைப்பில்

இருந்து அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு காண முயல்வதை எதிர்தரப்பினர் அரசியலாக்க முனைகிறார்கள். 15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்காக இணையம் ஊடாக விற்பனை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள விடயம் சமூகத்தின் மத்தியில் பாரிய அதிர்வலையினை ஏற்படுத்தியுள்ளது.

இச்ம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். ஒரு சில சமூக வலைத்தளங்கள் கடுமையாக கண்காணிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024