எரிபொருள் விலை உயர்வை மறைக்க அரசாங்கம் போடும் நாடகம் - ஒமல்பே சோபித தேரர் கடும் தாக்கு
கொரோனா தொற்றால் மக்கள் அவதியுறும் இந்தநேரத்தில் எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசிய உணவு விலைகளை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஓமல்பே சோபிதா தேரர் அரசிடம் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் துன்பத்தை அளிக்க வேண்டாம் என்று அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
வண.. ஓமல்பே சோபித தேரர் இந்த கருத்துக்களை இன்று எம்பிலிப்பிட்டியில் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
அதிகரித்த எரிபொருள் விலைகள் தொடர்பாக மக்களின் வேதனையைத் திசைதிருப்ப அரசாங்கம் பிற விடயங்களை முன்வைப்பதென்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கும் ஆளும் தரப்பின் ஒரு முக்கிய கட்சியின் செயலாளருக்கும் இடையிலான மோதல் தெளிவாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
எரிபொருள் மற்றும் பிற பொருட்களின் விலை அதிகரிப்பு மக்களுக்கு மேலும் சிரமத்திற்கு வழிவகுக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.