மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் கொடூர கொலை
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Jaso
மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் கொடூரமாக கொலை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பிங்கிரிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட மேல் கடிகமுவ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேல் கடிகமுவ பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மனைவியை தாக்கிய கணவன்
கொலையுண்ட பெண், குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த கணவனால் பலமுறை தாக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

தகராறு காரணமாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது பெற்றோர் வீட்டிற்கு மனைவி சென்றுள்ளார்.
கூரிய ஆயுதத்தால் கழுத்தை அறுத்து கொலை
பின்னர் அந்த வீட்டில் இருந்து குளிக்கச் சென்றபோது, கணவன் கூரிய ஆயுதத்தால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

சந்தேக நபர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கண்டுபிடிக்க பிங்கிரிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
போராடுவதும், போராடிப் போராடியே இறப்பதுமாக நீளும் துயரம்…
3 நாட்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்