இஸ்ரேலிய தாக்குதலை திட்டமிட்ட ஹமாஸ் சூத்திரதாரி யார்..!
கடந்த 7ம் திகதிசனிக்கிழமை ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டது ஹமாஸின் பாலஸ்தீன உறுப்பினரான மொஹமட் டைஃப் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மொஹமட் டைஃப் மிகவும் இரகசியமாக இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டதாகவும், ஹமாஸ் உறுப்பினர்களின் மூத்தவர்களுக்கு மட்டுமே இது தெரியும் என்றும், இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட குழுக்களுக்குக் கூட எதுவும் தெரியாது என்றும் கூறப்படுகிறது.
இஸ்ரேலிய படையினருக்கு அதிர்ச்சி
கடந்த 7ம் திகதி ஹமாஸ் அமைப்பினர் தரை, வான் மற்றும் கடல் மார்க்கமாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இது இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
'அல் அக்சா வெள்ளம்'
ஹமாஸ் தாக்குதலை 'அல் அக்சா வெள்ளம்' என்று மொஹமட் டைஃப் அழைத்துள்ளார். 'அல் அக்ஸா' என்பது இஸ்ரேலில் உள்ள ஒரு மசூதி. இந்த மசூதிக்கு வருகை தரும் யாத்ரீகர்கள் கடந்த காலங்களில் இஸ்ரேலிய இராணுவத்தின் பல்வேறு தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக மொஹமட் டைஃப் இந்த தாக்குதலை திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேலிய உளவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.